Wednesday, September 16, 2015

bath powder

இயற்கை குளியல் பொடி தயாரிப்பது எப்படி?-
அழகை விரும்பாத மனிதர்களே இருக்க முடியாது. அழகான முகத்தை பெற இன்றைக்கு பல விதமான ரசாயனக் கலவைகளை முகத்தில் பூசுகின்றனர். சிலர் அழகு நிலையங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.இதையே சாதகமாக வைத்து பணம் பறிக்க பலர் பல அழகுசாதனப் பொருட் களை உற்பத்தி செய்து சந்தையில் வைத்துள்ளனர். இதை வாங்கி உபயோகப்படுத்தியவர்கள் யாரும் முழுப் பயன்களை அடைந்ததில்லை.இதற்கு மாறாக முகத்தை கெடுத்துக்கொண்டவர்கள் தான் ஏராளம்.முகத்தையும் சருமத்தையும் பேணி பாதுகாக்க இயற்கை மூலிகைகள் நம்மிடையே நிறைந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளை பயன்படுத்தி நீங்களே முக அழகைப் பெறலாம்.
உலர்ந்த மகிழம் பூ பொடி 200 கிராம்
கிச்சிலி கிழங்கு பொடி 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் பொடி 100 கிராம்
கோரை கிழங்கு பொடி 100 கிராம்
உலர்ந்த சந்தனத் தூள் 150 கிராம்
இவற்றை ஒன்றாக கலந்து காரம் இல்லாத அம்மியில் சுத்தமான பன்னீர் விட்டு அரைத்து சிறிய வில்லைகளாகத் தட்டி நிழலில் நன்றாக உலர்த்தி வைத்துக்கொண்டு, தினமும் குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு பாலில் குழைத்து முகத்தில் தடவவும். அரை மணி நேரம் ஊறிய பின் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி வரவேண்டும். சோப்பு போடக்கூடாது. இவ்வாறு தினமும் செய்து வந்தால் சில நாட்களில் முகம் பளபளக்கும். முகம் மென்மையாகும். இந்த மருத்துவ முறையை வராகமித்ரர் அங்கரசனைகள் என்ற நூலில் கூறியுள்ளார்.
குளியல் பொடி:
இப்போது பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது. சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.
குளியல்பொடி தயாரிப்பது எப்படி?
மூலிகை பொருட்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்
சோம்பு 100 கிராம்
கஸ்தூரி மஞ்சள் 100 கிராம்
வெட்டி வேர் 200 கிராம்
அகில் கட்டை 200 கிராம்
சந்தனத் தூள் 300 கிராம்
கார்போக அரிசி 200 கிராம்
தும்மராஷ்டம் 200 கிராம்
விலாமிச்சை 200 கிராம்
கோரைக்கிழங்கு 200 கிராம்
கோஷ்டம் 200 கிராம்
ஏலரிசி 200 கிராம்
பாசிப்பயறு 500 கிராம்
இவைகளை தனித்தனியாக காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும்போது, தேவையான அளவு எடுத்து நீரில் குளித்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும். இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும். இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.
http://naattumarunthu.blogspot.in/2015/03/blog-post_91.html

Tuesday, September 15, 2015

saallagramam

சாளக்கிராமம் என்பது என்ன?
சாளக்கிராமம் என்பது கண்டகி நதியில் உருவாகும் ஒருவகையான அழகிய தெய்வீகம் நிறைந்த கல் ஆகும். இவை நத்தைக்கூடு, சங்கு முதலாய பல வடிவங்களில் பல வண்ணங்களில் கிடைக்கிறது. திருமால் தாமாகவே தங்கமயமான ஒளியுடன் திகழும் வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியின் வடிவெடுத்து, சாளக்கிராமத்தை குடைந்து, அதன் கர்ப்பத்தை அடைவார். அங்கு ரீங்கான வடிவில் இருந்து கொண்டே தன் முகத்தினால் பல விதமான சுருள் ரேகையுடன் கூடிய பல சக்கரங்களை வரைந்து பல்வேறு அவதாரங்களை விளையாட்டாக வரைந்து பின் மறைந்து விடுவதாக கூறுவர். இப்படிப்பட்ட வடிவங்கள்தான் வணங்கிட உகந்தவையாகும்.
சிறப்பு: சாளக்கிராமத்தில் தெய்வீக அருள் இருப்பது மட்டுமில்லாமல் இவற்றில் 14 உலோக சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது. வழிபடப்பெற்ற சாளக்கிராமங்களை சரித்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்து பெற வேண்டும் என்பது நியதி. சாளக்கிராமத்தின் தனித்தன்மையை அறிந்தவர்களிடம் அதன் வண்ணம், அதில் அமைந்துள்ள ரேகைகள் ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களுடைய அறிவுரையின் பேரில் வாங்குவது சிறப்பு. சேவை தரும் எம்பெருமான் ஸ்ரீமூர்த்தி, கேசவன், நாராயணன், மாதவன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்கிரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன், தாமோதரன் ஆகிய பன்னிரண்டு கூறுகளாகக் கற்கள் வடிவத்தில் விளங்கி, செல்வத்தை வழங்கும் அதிபதியாகக் குபேரன் திசை நோக்கி எழுந்தருளியுள்ளார். சாளக்கிராமத் தலம் தானாக சுயம்புவாகத் தோன்றிய காரணத்தால் ஸ்வயம் வியக்தம் என்னும் சிறப்பினைக் கொண்டு விளங்குகிறது. இங்கு எப்பொழுதும் எம்பெருமான் நிரந்தரமான நிலையில் நித்ய சாந்நித்யமாக எழுந்தருளியிருக்கிறார் என்பர் வைணவப் பெரியோர்கள். சாளக்கிராமம் புனிதம் வாய்ந்த கண்டகி நதியில் விளைவதால் தோஷம் இல்லாதது. யாரும் தொட்டு வழிபடலாம். சாளக்கிராம வடிவங்கள் பல வகைப்படும். ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு வனமாலையை அணிந்த வடிவமுடையது லட்சுமி நாராயண சாளக்கிராமம். நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது லட்சுமி ஜனார்த்தன சாளக்கிறாமம், இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு ரதாகாரமாக இருப்பது ரகுநாத சாளக்கிராமம். இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது வாமன சாளக்கிராமம். வனமாலையுடன் இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டிருப்பது ஸ்ரீதர சாளக்கிராமம். விருத்தாகாரமாக இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டது தாமோதர சாளக்கிராமம். மிகப்பெரிதும் இல்லாமல், மிகச் சிறியதும் இல்லாமல் ஏழு சக்கரங்களையும் சரத்பூஷணமும் கொண்டிருப்பது ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம். விருத்தாகரமாக இரண்டு சக்கரங்களும் அம்பறாத் தூணியும் பாணத்தின் அடியும் கொண்டது ரணராக சாளக்கிராமம். பதினான்கு சக்கரங்களும் கொண்டது ஆதிசேட சாளக்கிராமம். சக்கர காரமாக இரண்டு சக்கரங்களைக் கொண்டது மதுசூதன சாளக்கிராமம். 
ஒரே சக்கரத்தைக் கொண்டிருப்பது சுதர்சன சாளக்கிராமம். மறைபட்ட சக்கர காரமாகத் தோன்றுவது கதாதர சாளக்கிராமம். இரண்டு சக்கரங்களுடன் ஹயக்ரீவ குதிரை உருவமாகக் காணப்படுவது ஹயக்ரீவ சாளக்கிராமம். இரண்டு சக்கரங்களையும், பெரிய வாயையும் வனமாலையையும் கொண்டது லட்சுமி நரசிம்ம சாளக்கிராமம். துவரக முகத்தில் இரண்டு சக்கரங்களையும் கொண்டு சமாகாரமாக உள்ளது வாசுதேவ சாளக்கிராமம். சூட்சுமமான சக்கரமும் ஒரு ரந்திரத்திற்குள் பல ரந்திரங்களைக் கொண்டிருப்பது பிர்த்யும்ன சாளக்கிராமம். விருத்தாகாரமாகவும், செம்பட்டு நிறம் கொண்டதாகவும் இருப்பது அநிருத்த சாளக்கிராமம். இவ்வாறு சாளக்கிராமக் கற்கள் உள்ள இடத்தில் எம்பெருமானும் சகல இறை சக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள். சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும். இதனை பால் அல்லது அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை கூடியது போல இருக்கும். சாளக்கிராமம் உடைந்துபோனாலும் அதில் சக்கரரேகைகள் இருந்ததால் சிறப்பாகும். சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள் . சகல செல் வங்களும் பரிபூரண விருத்தியாகும்.  
சாளக்கிராம வடிவங்கள் பல வகைப்படும். 
1. ஒரு துளையில் நான்கு சக்கரங்களைக் கொண்டு
வனமாலையை அணிந்த வடிவமுடையது லட்சுமி நாராயண
சாளக்கிராமம். 
2. நான்கு சக்கரங்களுடன் வனமாலை இல்லாமல் இருப்பது
லட்சுமி ஜனார்த்தன சாளக்கிறாமம், 
3. இரண்டு துளைகளுக்குள் நான்கு சக்கரங்களையும் கொண்டு
ரதாகாரமாக இருப்பது ரகுநாத சாளக்கிராமம். 
4. இரண்டு சக்கரங்கள் மாத்திரம் கொண்டிருப்பது வாமன
சாளக்கிராமம். 
5. வனமாலையுடன் இரண்டு சக்கரங்களை மட்டும்
கொண்டிருப்பது ஸ்ரீதர சாளக்கிராமம். 
6. விருத்தாகாரமாக இரண்டு சக்கரங்களை மட்டும் கொண்டது
தாமோதர சாளக்கிராமம். 
7. மிகப்பெரிதும் இல்லாமல், மிகச் சிறியதும் இல்லாமல் ஏழு
சக்கரங்களையும் சரத்பூஷணமும் கொண்டிருப்பது ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம். 
8. விருத்தாகரமாக இரண்டு சக்கரங்களும் அம்பறாத் தூணியும்
பாணத்தின் அடியும் கொண்டது ரணராக சாளக்கிராமம். 
9. பதினான்கு சக்கரங்களும் கொண்டது ஆதிசேட சாளக்கிராமம். 
10. சக்கர காரமாக இரண்டு சக்கரங்களைக் கொண்டது மதுசூதன சாளக்கிராமம். 
11. ஒரே சக்கரத்தைக் கொண்டிருப்பது சுதர்சன சாளக்கிராமம். 
12. மறைபட்ட சக்கர காரமாகத் தோன்றுவது கதாதர சாளக்கிராமம். 
13. இரண்டு சக்கரங்களுடன் ஹயக்ரீவ குதிரை உருவமாகக் காணப்படுவது ஹயக்ரீவ சாளக்கிராமம். 
14. இரண்டு சக்கரங்களையும், பெரிய வாயையும் வனமாலையையும் கொண்டது லட்சுமி நரசிம்ம சாளக்கிராமம். 
15. துவரக முகத்தில் இரண்டு சக்கரங்களையும் கொண்டு சமாகாரமாக உள்ளது வாசுதேவ சாளக்கிராமம். 
16. சூட்சுமமான சக்கரமும் ஒரு ரந்திரத்திற்குள் பல ரந்திரங்களைக் கொண்டிருப்பது பிர்த்யும்ன சாளக்கிராமம். 
17. விருத்தாகாரமாகவும், செம்பட்டு நிறம் கொண்டதாகவும் இருப்பது அநிருத்த சாளக்கிராமம். 
இவ்வாறு சாளக்கிராமக் கற்கள் உள்ள இடத்தில்
எம்பெருமானும் சகல இறை சக்திகளும் நித்திய வாசம்
செய்வார்கள். 
சகல செல்வங்களும் பரிபூரண விருத்தியாகும். 
இதனை பால் அல்லது
அரிசியின் மீது வைத்திருந்து எடுத்துப் பார்த்தால் அதன் எடை
கூடியது போல இருக்கும். சாளக்கிராமம் உடைந்துபோனாலும்
அதில் சக்கரரேகைகள் இருந்ததால் சிறப்பாகும். 
சாளக்கிராம கற்கள் இருக்குமிடத்தில் எம்பெருமானும் சகல
இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள் . சகல செல் வங்களும் பரிபூரண விருத்தியாகும். 
12 அதற்கு மேல் சாளக்கிராமங்கள் வைத்து வழிபட்டு வரக்கூடிய
வீடுகளை 108 திவ்வியதேசத்தகுதியில் வைத்து பாவிக்க வேண்டுமென்பர். 
சாளக்கிராமங்களும் ஒரு குடும்பத்தின் குலதனச் சொத்தாக
கருதுவர். சாளக்கிராமத்தை இருமுறை வழிபடுதல் வேண்டும். 
சாளக்கிராமங்கள் எந்த விதமான வண்ணத்தில்
அமைந்துள்ளதோ அந்த வடிவங்கொண்ட திருமால் வாழும்
இடமாக கருதப்படுகின்றன. 
வண்ணங்களுக்கேற்ப அவற்றின் பூஜை பலன்களும் மாறுபடும்.
நீலநிறம் - செல்வத்தையும், சுகத்தையும் தரும்
பச்சை - பலம், வலிமையைத் தரும்
கருப்பு - புகழ், பெருமை சேரும்
புகைநிறம் - துக்கம், தரித்திரம்.

Wednesday, July 22, 2015

diabetes

சர்க்கரை வியாதியா? கவலை வேண்டாம் !
இது விளம்பரமல்ல...!
உண்மை...!
(நன்றி: தமிழ் சித்த மருத்துவர் அருண் சின்னையா)
தமிழ் நாட்டிலேயே முன்னோடியாக இருக்கக் கூடிய ஒரு நகரம் எது என்றால் சென்னை. சக்கரை வியாதிக்கான மிகப் பெரிய வணிகச் சந்தையை தனக்குள்ளே உள்ளடக்கிக் கொண்டு, நடைப்பிணமாய் திரியக் கூடிய தமிழ் சமூகம் இன்று உருவாகி உள்ளது. அதற்கான காரணங்கள் என்ன? அது எப்படியெல்லாம் வருகிறது? அதை எப்படி தடுக்கலாம்? அதற்கான உணவு முறை கட்டுப்பாடுகள் என்ன? இதையெல்லாம் முழுமையாக அலசி ஆராயப்போகிறோம். முதலில் நீரிழிவு என்பது அன்றே சித்தர்களால் மது மேகம் என்ற பெயரில் சொல்லப்பட்டது. இந்த மது மேகம் எப்படியெல்லாம் வரும் என்பதை விளக்கும் சித்தர் பாடலானது . . . .
“கோதையார் களவின் போதை
கொழுத்த மீனிறைச்சி போதை
பாலுடன் நெய்யும்
பரிவுடன் உண்பீராகில்
வருமே பிணி”

என்று மது மேகத்தைப் பற்றி சொல்கிறார்கள் சித்தர்கள். அதாவது கோதையார் களவின் போதை என்று சித்தர்கள் சொல்லக் கூடிய ஒரு பெரிய காரணி என்ன என்றால் உடலுறவில் ஈடுபடும் பொழுது முழுமையாக செயல்படக் கூடியது நாளமில்லாச் சுரப்பி மண்டலம் ஆகும். ஆதலால் மதுமேக நோய் என்பது ஒரு ஹார்மோனல் கிருமி என்கிறார்கள். உடலில் இன்சுலின் என்கிற ஹார்மோன் குறைவதால் வரக் கூடிய நோய் இதுவாகும்.
சித்தர்கள் அன்றே தெளிவாக கூறியிருக்கிறார்கள் “கோதையார் களவின் போதை, கொழுத்த மீனிறைச்சி போதை” என்றால் நிறைய அசைவ உணவுகள், மந்த உணவுகள் எடுத்துக் கொண்டால் இந்த உணவின் மூலம் பாலியல் சார்ந்த உணர்வுகள் தூண்டப்பட்டு அதன் அடிப்படையில் அடிக்கடி பாலியல் சார்ந்த உறவுகளில் ஈடுபடும் பொழுது மது மேகம் என்ற நோய்க்கு மனிதர்கள் ஆட்படுகிறார்கள் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
அதே போல் “பாலுடன் நெய்யும், பரிவுடன் உண்பீராகில்” என்பது பாலாக இருந்தாலும் சரி, நெய்யாக இருந்தாலும் சரி அதை அரிசியோடு சேர்த்து எடுக்கும் கால கட்டத்தில் நீரிழிவு கண்டிப்பாக வரும் என்பது சித்தர்களின் கூற்று. இந்த மதுமேகந்தான் இன்று உலகையே அச்சுறுத்தக் கூடிய நீரிழிவு என்னும் நோயாகும்.. இந்த நீரிழிவு நோய் என்பது இன்று அனைவருக்கும் பொதுவாகிவிட்டது. நீரிழிவில் மூன்று வகையான நீரிழிவுகளைப் பார்க்கிறோம். குழந்தைகளுக்கு வரக்கூடியது (Juvenile) நீரிழிவு என்று சொல்கிறார்கள் இது முதல் விதம். இரண்டாவது மருந்துகளால் கட்டுப்படக் கூடிய நீரிழிவாகும்.
மருந்தே இல்லாமல் இன்சுலினுக்கு கட்டுப்படக்கூடிய நீரிழிவு. இது மூன்றாவது விதம். என்று மூன்று விதமான நீரிழிவு இருக்கிறது. சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்து விட்டது என்றால் அவருடைய முழுமையான செயல்பாடுகள் சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்து விடும். உடல் மெலிந்து விடும், அடிக்கடி சிறுநீர் கழிக்கக் கூடிய தன்மை இந்த மாதிரி அதன் அறிகுறிகளை கொடுமையாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு கால கட்டம் உண்டு.
இன்று தமிழ் நாட்டில் தமிழ்ச் சமூகம் சந்திக்கக் கூடிய ஒரு பெரிய பிரச்சினை என்ன என்றால் நீரிழிவு நோய், இது ஒரு குறைபாடு தான். இக்குறைபாட்டிலிருந்து நாம் மீள முடியும் என்கிற தன்னம்பிக்கையை இழந்து விட்டு எப்பொழுதும் மருந்துகளையும், மருத்துவர்களையும் தேடி அவர்கள் பின்னாலேயே ஓடக் கூடிய ஒரு நிலையில் தான் தமிழ் மக்கள் இன்று இருக்கிறார்கள். அதற்கான காரணம் என்ன என்று பார்த்தால், எவ்வளவோ உணவுப் பொருட்கள் சொல்லப்பட்டிருந்தாலும் நமக்கு அந்த பாரம்பரியமான உணவுப் பொருட்கள் இந்நோயை கட்டுப்படுத்தக் கூடிய தன்மையில் இருந்தாலும் கூட அந்த உணவுகளை நாம் எடுக்கத் தயாராக இன்று இல்லை.
ஏன் என்றால் நாம் அந்த அளவுக்கு அரிசியை பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம். அரிசியிலிருந்து கிடைக்கக் கூடிய Carbohydrates என்ற மாவுச்சத்து மிகவும் அதிகமாக இருகிறது. இந்த அரிசியையே தொடர்ந்து 2 வேளை அல்லது 3 வேளையாகச் சாப்பிடக் கூடிய மக்களுக்கு என்ன ஆகும்? நீரிழிவு தொடர்ந்து உடலிலேயே இருக்க ஆரம்பிக்கிறது. நீரிழிவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக அது உணவுகளால் தான் சாத்தியமாகும். இந்த அவசர கால யுகத்தில், உணவுப் பொருட்களில் நிறைய உடனடி உணவுகளைப் (Instant food) பயன்படுத்துகிறோம்.
என்னுடைய நீரிழிவுக்கான மருத்துவ சிகிச்சையின் போது நான் பலரையும் பார்த்திருக்கிறேன், காலை வேளையில் 2 பிரட்டையும், ஒரு கோக், பெப்சி, மிராண்டா போன்ற குளிர் பானத்தை குடிப்பவர்களுக்கு, ஒரு மாதமோ, இரண்டு மாதமோ அல்லது ஆறு மாதமோ இதையே பழக்கப்படுத்திவர்களுக்கெல்லாம் நீரிழிவு வந்திருக்கிறது. எனவே உணவில் நிறைய துரித உணவுகள், ரசாயன உணவுகள் எடுக்கக் கூடியவர்களுக்கு கண்டிப்பாக நீரிழிவு வருகிறது.
இதை எப்படி தடுக்கலாம், என்றால் மருந்து ஓரளவிற்கு கட்டுப்படுத்தத்தான் செய்யும், ஆனால் முழுமையாக குணப்படுத்திவிடாது. ஆனால் உணவுகளை அடையாளப்படுத்தி, தேர்ந்தெடுத்து சாப்பிடும் பொழுது சர்க்கரை நோயை முழுமையாக நாம் குணப்படுத்த முடியும். அன்றைய சித்தர்கள் சொன்ன மதுமேகந்தான் இன்று உலகையே ஆட்டிப் படைக்கக் கூடிய சர்க்கரை வியாதி.
இந்த சர்க்கரை நோய்க்கான காரணம் என்ன என்றால் அடித்துச் சொல்லலாம் உணவு முறைகளின் முரண்பாடுதான். இது பாரம்பரிய நோய், இது அம்மா அப்பாவுக்கு இருந்தால் நமக்கும் வரும் என்பது உண்மையாக இருந்தாலும் கூட அதைக் கண்டிப்பாகத் தடுக்க முடியும். எனவே அதற்கான உணவுகள் என்னென்ன? அதை எப்படியெல்லாம் நாம் பயன்படுத்தலாம் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த . . .
வெந்தயம்:
சர்க்கரை நோயை பிரதானமாக கட்டுப்படுத்தக் கூடிய தன்மை வெந்தயத்திற்கு உண்டு. வெந்தயத்தைப் பிரித்தால் வெந்த + அயம். வெந்த என்றால் பஸ்பமாகி விட்டது என்று அர்த்தம். அயம் என்றால் இரும்பு என்று பொருள். இரும்பை பஸ்பமாக்கக்கூடிய ஒரு பொருள் எது என்றால், அது வெந்தயம் தான். தொடர்ந்து வெந்தயத்தை வறுத்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வந்தால் கூட நீரிழிவு நோய் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.
பாகற்காய்:
அடுத்து பாகற்காய். பாகற்காயை நன்கு காயவைத்துப் பொடி செய்து காலை, இரவு என்று இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிடக் கூடியவர்களுக்கு கண்டிப்பாகச் சர்க்கரை நோய் முழுமையாகக் குறையும். சர்க்கரை நோய் என்பது தனி நோய் கிடையாது. இது பல நோய்களுடைய சார்பு நோய் ஆகும்.
அதாவது முதலில் நீ செல் பின்னாடியே நான் வருகிறேன் என்று சொல்வது மாதிரி ஒருவருக்கு சர்க்கரை நோய் வர ஆரம்பித்தது என்றால் தொடர்ந்து ரத்த அழுத்தம் வரலாம், கொழுப்பு நோய் ,கொழுப்பு சீரற்ற நிலையில் மாறலாம். ரத்தத்தில் Try Glyceride என்கின்ற கொழுப்பு இருக்கிறது.
அதே மாதிரி LDL என்று சொல்லக் கூடிய கெட்ட கொழுப்பும் இருக்கிறது. இந்த இரண்டும் அதிகமாக மாறும் பொழுது இதயம் சார்ந்த நோயும் வரலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இதயம் சார்ந்த நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உண்டு. சர்க்கரை அதிகமாகி கட்டுப்படாத சூழலினால் சிறுநீரகப் பாதிப்பு சார்ந்த நோயும் வரலாம். இதனால் சிறுநீரக செயலிழப்பு கூட உண்டாகலாம்.
நினைவுத்திறன் குறைந்து போவது, மூளைத்திறன் குறைந்து போவது இப்படி பல நோய்களைக் கொண்டுவரக் கூடிய நோயாக சர்க்கரை நோய் உள்ளது. நீரிழிவு என்றால் உடலை நீராய் இழக்கச் செய்யக் கூடிய ஒரு வியாதி நீரிழிவாகும். நம் உடம்பில் இருக்கக் கூடிய அனைத்து ஆதாரங்களையும் சிறிது சிறிதாக வெளியே கொண்டு வந்து விடும். அதாவது எலும்பு நம் உடம்பிற்கு வன்மை தரக்கூடியதாக இருந்தால் கூட, அந்த எலும்பையே கரைக்கக் கூடிய தன்மை இந்த நீரிழிவுக்கு உண்டு.
ஆதலால் நீரிழிவை நாம் உண்ணும் உணவின் மூலம் கட்டுப்படுத்த வேண்டும். நீரிழிவு நம் உடம்பை மென்மையாக்குகிறது. அப்பொழுது நன்றாக உண்ணக்கூடிய உணவுப் பொருட்களைச் சாப்பிட வேண்டும். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், எந்த உணவுப் பொருட்களில் துவர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறதோ அவைகள் நீரிழிவை கட்டுப்படுத்தும்.
வாழைப்பூ:
நீரிழிவு நோயாளி ஒருவர் வாழைப்பூவை கசாயம் செய்து சாப்பிட்டார் என்றால் கண்டிப்பாக நீரிழிவு கட்டுப்படும். ஆனால் வாழைப்பூவில் கடலைப்பருப்பைச் சேர்த்து இன்று நாம் பருப்பு வடையாகத்தான் சாப்பிடுகிறோம். இதே வாழைப்பூவுடன், சிறிது காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து அரைத்து துவையல் மாதிரி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது சர்க்கரை நோய் கட்டுப்படும்.
தென்னைமரப் பூ:
அதே மாதிரி தென்னம்பாலைக்குள் இருக்கும் தென்னை மரத்துப் பூவை நன்றாகக் காயவைத்து, அதைப் பொடி செய்து காலையிலும், இரவிலும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தோம் என்றால் சர்க்கரை நோய் கட்டுப்படுவதுடன் சர்க்கரை நோயால் தளர்ந்து போன நரம்புகள் அனைத்தும் சரியாகிவிடும். இதனால் நம் கண் பார்வையும் தெளிவாக இருக்கும்.
நீரிழிவால் நரம்பு பாதிக்கப்படுவதால் கண்ணில் வரக்கூடிய நோய்கள் நிறைய வரும். அதே போல் நம் பாதங்களிலும் பல நோய் வரும். இவை அனைத்தையும் சரி செய்யக் கூடிய தன்மை தென்னம்பாலைக்குள் உள்ள தென்னைமரத்துப் பூவுக்கு உண்டு.
நெல்லி, கடுக்காய், தான்றிக்காய் :
அது போல் நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் இதையும் சம அளவில் கலந்து வைத்துத் தொடர்ந்து திரிபலா என்கிற சூரணத்தையும் சாப்பிடும் பொழுது நீரிழிவு முழுமையாகக் கட்டுப்படக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு. அதே போல் இந்த சர்க்கரை நோய்க்கு என்ன செய்யலாம் என்றால், சமையலில் சீரகத்திற்குப் பதிலாக அல்லது சீரகத்துடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து சமையலில் ஈடுபடுத்தும் பொழுது சர்க்கரைக்கு அற்புதமான ஒரு மருந்தாக இருக்கும்.
அதே போல் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு ( Try Glyceride) அதாவது இதயத்திற்கு செல்லக் கூடிய ரத்த நாளங்களில் அடிக்கக் கூடிய ஒரு கொழுப்பு ட்ரை க்லீசரைடு. உலகம் முழுக்க அதற்கான மருந்துகள் குறைவு. அந்த மருந்துகளை உபயோகப்படுத்தினால் அதற்கான பக்கவிளைவுகள் அதிகம். இதை முழுமையாக சரி செய்ய நம் நாட்டு கருவேப்பிலை, லவங்கப் பட்டை, வெந்தயம் இந்த மூன்றையும் சம அளவில் கலந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக அற்புதமான பலன் கிடைக்கும்.
அன்றைய மது மேகத்தில் சித்தர்கள் சொன்ன உணவுகள் எல்லாம் இதுதான். சித்தர்களுடைய விஞ்ஞான பார்வைக்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்லாம். அதாவது அன்றைய காலத்தில் மதுமேகம் வந்த நோயாளிகளுக்கு சித்தர்கள் கொடுத்த மருந்து பருத்தி கொட்டை, எள்ளுப் புண்ணாக்கு, கோரைக் கிழங்கு, ஆவாரம்பூ போன்றவைகளையே மருந்தாகக் கொடுத்தனர். என்ன இது எருமை மாடு சாப்பிடுவதை மருந்து எனச்சொல்கிறாரே என்று நினைத்தால் அது தவறு.
இந்த உலகத்தில் நீரிழிவு என்ற நோய் பரவத்தொடங்கிய போது இன்சுலின் குறைபாடு உள்ளவர்களுக்கு மாத்திரையால் ஒரு சிலருக்கு சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் இன்னும் ஒரு சிலருக்கு மாத்திரை பலன் கொடுக்க வில்லை. அப்போது என்ன செய்தார்கள் என்றால் பன்றிகளுடைய கணையம், எருமை மாட்டுடைய கணையம் இந்த இரண்டு கணையத்திலிருந்து இன்சுலின் நுண்ணுயிர் எடுக்கப்பட்டு அது மனிதருக்கு ஏற்புடைய வகையில் இன்சுலினாக மாற்றப்பட்டு அதன் பிறகு, அதை மனிதர்களுக்கு மருந்தாகச் செலுத்தினார்கள்.
இப்பொழுது DNA கூட்டமைப்பு உள்ள human Insulin இன்று உலகம் முழுக்க வந்துவிட்டது. ஆனால் அதற்கு முன்பு கோரைக் கிழங்கையே பிரதானமாகச் சாப்பிடக் கூடிய பன்றிகளின் கணையத்திலிருந்து இன்சுலின் எடுக்கப்பட்டது, பருத்திக் கொட்டையையும், எள்ளுப் புண்ணாக்கையும் சாப்பிட்ட எருமை மாட்டுக் கணையத்திலிருந்து இன்சுலின் எடுக்கப்பட்டது. இதில் ஒரு ஆச்சர்யம் என்றால் சித்தர்களுக்கு எவ்வாறு இது தெரிந்தது என்று தெரியவில்லை. ஏன் என்றால் பிரதானமாக பருத்திக் கொட்டையிலேயும், கோரைக் கிழங்கிலேயும், எள்ளுப் புண்ணாக்கிலேயும் இன்சுலின் அளவு அப்படியே இருக்கிறது. அதில் உள்ள கந்தகச் சத்து அப்படியே வரும். நம் உடம்பில் இருக்கக் கூடிய கார்போ ஹைட்ரேட்- ஐ முழுமையாகக் கரைக்கக் கூடிய தன்மை இதற்கு உண்டு.
அதனால் தான் இன்றும் எனது கிராமத்தில் சர்க்கரை நோய் என்று கூறினால் யாரும் தொடர்ந்து மாத்திரை சாப்பிடுபவர்களை பார்க்கவே முடியாது. மிக எளிமையாக அரைக் கிலோ எள்ளு புண்ணாக்கு, அரை கிலோ பருத்திக் கொட்டை, அரை கிலோ ஆவாரம்பூ , 100 கிராம் கருஞ்சீரகம் இவற்றை உரலில் இட்டு இடித்து வைத்துக் கொள்கிறார்கள். இதில் ஒரு கையளவு எடுத்து சிறிது கருப்பட்டி, பனைவெல்லம் சேர்த்து இக்கலவையை நன்கு கொதிக்க வைத்து, அதை நன்றாக வடிகட்டி காலையிலேயும், இரவிலேயும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் தானாகவே சரியாகிவிடும்.
சர்க்கரை நோய் வந்தவர்கள் எந்த மருந்தை எடுத்தும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். அதற்குத் தகுந்த மாதிரி உடலில் வியர்வை உண்டாக்க வேண்டும். அதுதான் பிரதானமானது. நாம் சிறிது நடைப்பயிற்சி கூட செய்யாமல் இருப்பதனால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியாது. ஒரு இலகுவான நடைப்பயிற்சி, உடலை வருத்திச் செய்யக் கூடிய சில வேலை இவற்றையெல்லாம் செய்து வியர்வையை உண்டாக்கிக் கொள்ளவேண்டும். குறைந்தது 50 மில்லி அளவாவது சர்க்கரை நோயாளிகளுக்கு வியர்வை வர வேண்டும்.
இதில் இன்னும் பெரிய விசயம் என்னவென்றால் நீரிழிவால் வரக்கூடிய கால் புண்ணானது குழிப் புண்ணாக மாறிவிடும். அந்தப் புண்ணுக்கு ஆங்கில மருத்துவத்தில் டின்ஜர், டெட்டால், மற்றும் சில மருந்துகளையும் சேர்த்து குணப்படுத்துகிறோம் பேர்வழி என்று சொல்லி, பிறகு காலையே வெட்டக் கூடிய ஒரு நிலை வருகிறது. கிராமங்களில் வெறும் ஆவார இலையை அவித்து அந்த புண்ணில் வைத்து கட்டுகிறார்கள். அதன் பின் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் அப்புண் குணமாகி விடுகிறது அவ்வளவு அதிசயமான விசயம் எல்லாம் சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்.
சர்க்கரை நோயில் ஆவாரம்பூவிற்கு ஒரு பிரதானமான இடம் இருக்கிறது. அதில் தங்கத்தின் சத்து இருப்பதாக சித்தர்கள் கூறுகிறார்கள். ஆனால் இன்றைய விஞ்ஞானம் இப்பூவை ஆராய்ச்சி செய்து பார்க்கும் பொழுது அதில் தங்கத்தின் கூறுகள் இருப்பதை ஒத்துக் கொள்கிறது. ஆவாரம்பூ இந்நோய்க்கு அவ்வளவு அற்புதமானது. அதனால் சித்தர்கள் கூறுவார்கள் “ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ” என்று. இந்த ஆவாரையைத் தொடர்ந்து சாப்பிடக் கூடியவர்களுக்கு சாவே இல்லை என்று கூறுகிறார்கள். சர்க்கரை நோயில் அது முழுக்க முழுக்க உண்மை.
ஆவாரம் பூ:
இன்று சர்க்கரை நோய்க்கு இனிப்புத் துளசி சாப்பிடுபவர்கள் நிறைய நபர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் ஆவாரம் பூவை தேநீராகச் சாப்பிடும் பொழுது சர்க்கரை நோய் கட்டுப்படுவதை நாங்கள் கண் கூடாக காண்கிறோம். சத்தாகச் சாப்பிடுங்கள் சர்க்கரையைக் கட்டுபடுத்துங்கள் என்று நாங்கள் கூறுகிறோம். உணவை கட்டுப்படுத்தும் பொழுது அந்த உணவின் ஊட்டமேல்லாம் குறைய ஆரம்பிக்கிறது. ஆக தேர்ந்தெடுத்த உணவை நாம் எடுக்கும் பொழுது நல்ல முழுமையான பலன் கண்டிப்பாக கிடைக்கும்.
'ஆவாரம்பூ, சுக்கு, ஏலக்காய் இவற்றை தொடர்ந்து கொதிக்கவைத்து கசாயமாகச் சாப்பிடும்பொழுது சர்க்கரை நோய் முழுமையாக கட்டுப்படும்.இது மிக எளிமையான வழிமுறைஆகும். தேநீர் சாப்பிடக் கூடிய அதே சுவை இதிலேயும் இருக்கும். ஆவாரம்பூ தேநீர் சாப்பிட்டுப் பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும். இன்னும் சர்க்கரை நோய்க்கு சிறுகுருஞ்சான், நாவல் கொட்டை, மருதம்பட்டை, வேப்பம்பட்டை, கடலலஞ்சில் இவை ஐந்தையும் சம அளவு கலந்து, பொடி செய்து வைத்துகொண்டு காலை, இரவு நேரம் தொடர்ந்து சாப்ப்பிட்டுக் கொண்டு வந்தால் சர்க்கரை நோய்க்கு நல்ல பலன் இருக்கும்.
நீரிழிவு என்றால் உடம்பை மென்மைப் படுத்தக் கூடிய ஒரு வியாதி ஆகும், அந்த நீரிழிவைக் கட்டுப்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் உடம்பு நல்ல சக்தி பெரும். நீரிழிவு நோயாளிகள் உடம்பில் அதிகம் நீர்ச்சத்து இழக்காமல், தண்ணீர் தாகம் அதிகம் இல்லாமல், நாவு வறட்சி இல்லாமல் இருக்க கவனம் செலுத்த வேண்டும். நாம் மேலே கூறிய உணவுகளை எல்லாம் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
நாம் உணவில் நிறைய பிஞ்சுக் காய்கறிகளான முருங்கைப் பிஞ்சு, பீர்க்காய்ப் பிஞ்சு , புடலங்காய்ப் பிஞ்சு, பீன்ஸ், அவரை இவை அனைத்தையும் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வாருங்கள். இன்று இருக்கும் அலோபதி மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளிடம் கேரட் சாப்பிடாதீர்கள், அது சர்க்கரை நோய்க்கு நல்லதில்லை என்று கூறி வருகிறார்கள். அவர்கள் அப்படிச் சொன்னதனால் 10 வருடமோ அல்லது 15 வருடமோ கேரட்டையே சாப்பிடாத சக்கரை நோயாளிகள் எனக்கு தெரிந்து நிறைய பேர் இருக்கிறார்கள். கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது.
இதில் பீட்டா கரோடினாய்ஸ் எனும் ஊட்டச் சத்து இருப்பதனால் நம் தோல் பகுதிக்கு கீழ் இருக்கக் கூடிய தசை பகுதியில் சக்தியை சேர்த்து வைக்கக் கூடிய தன்மை கேரட்டிற்கு உண்டு. அதனால் தாராளமாக நீரிழிவு நோயாளிகள் கேரட்டைச் சாப்பிடலாம் தவறில்லை.
அது போல் தமிழ் நாட்டில் இருக்கக் கூடிய ஆங்கில மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை பார்த்து இளநீர் சாப்பிடாதீர்கள் என்று கூறி திசை திருப்புகிறார்கள். இளநீர் சாப்பிட்டால் கண்டிப்பாக நீரிழிவு அதிகமாகிவிடும் என்று கூறி நோயாளிகளைப் பயமுறுத்துகிறார்கள். இது தவறான செயலாகும். நான் அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன், கரும்புச் சாற்றிலிருந்து சர்க்கரை தயார் செய்யலாம், இளநீரிலிருந்து சர்க்கரை தயார் பண்ண முடியுமா? இதை யோசித்து பாருங்கள். இளநீரில் அத்தனை கால்சியமும் இருக்கிறது. அச்சத்தில் புண்களை ஆற்றக் கூடிய தன்மை இருக்கிறது. ஒரு தட்டுச் சாப்பாட்டில் இருக்கக் கூடிய கார்போ ஹைட்ரேட்ஸ் இளநீரில்கிடையாது.
அதனால் என்னைப் பார்க்க வரும் நோயாளிகளுக்கு நான் கூறுவது, இளநீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அந்த வெந்தயத்தையும் இளநீரையும் நன்கு கலந்து சாப்பிடுங்கள் என்கிறேன். அப்படிச் சாப்பிட்டால் சர்க்கரை முழுமையாகக் கட்டுப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது. அதே மாதிரி மருதம்பட்டையைக் கசாயம் செய்து தொடர்ந்து சாப்பிடும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
நாம் உண்ணும் உணவில் பல்வேறு உணவுகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் திணிக்கத் தயாராகி கிட்டத்தட்ட 17 வகையான நூடுல்ஸ்சில் அதிக பொட்டாசியம் சத்து , அதிக சோடியம் சத்து ஆகியவை அதிகமாக இருக்கிறது கூவிக் கூவி விற்பனை செய்து நம்மை வாங்க வைக்கிறது. இதை இந்திய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, இந்த பன்னாட்டு உணவுகள் உண்பதற்கு ஏற்ற உணவுகள் அல்ல, இவைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் ஆதாலால் இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொன்னால் கூட, இவைகளை நிறுத்துவதற்கு எந்த அரசும் தயாராக இல்லை. ஏன் என்றால் பன்னாட்டு நிறுவனங்கள் கொடுக்கக் கூடிய மிகைமிஞ்சிய வரியே இதற்குக் காரணம் ஆகும்.
இந்தத் தொகை பெரிய தொகையாக ஆளுகின்றவர்களுக்கு தெரிவதால் மக்களுடைய அடிப்படை ஆரோக்கியத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாத ஒரு சூழல் இருக்கிறது. ஆக ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கான விழிப்புணர்வை அவன்தான் தேடி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்விற்கு உணவுக் கட்டுப்பாடு என்பது கண்டிப்பாக வேண்டும். உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டிய விசயமும் நம் கையில் தான் இருக்கிறது.
சித்தர்கள் சொன்ன சிறு தானியங்கள் வரகரிசி, திணை அரிசி, குதுரவாலி, சாமை எல்லாமே நார்ச்சத்து உள்ள அற்புதமான உணவுகள். இந்த உணவுகளை ஒரு வேளையோ, இரு வேளையோ சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிடும் பொழுது நோய் கட்டுப்படக் கூடிய ஒரு தன்மை உண்டு. சர்க்கரை நோய் வந்து விட்டாலே உடலில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணச்சத்து இவைகள் குறைந்து விடும். இவற்றை ஈடுகட்ட துவர்ப்பான உணவுகளை எடுத்துக் கொண்டால் சர்க்கரையை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்.
இந்தியாவானது இன்று உலகத் தாயாரிப்புகளை விற்கும் பெரும் வணிகச் சந்தையாக, வளர்ந்த நாடுகளுக்கென மாறிவிட்டது. அதனால் தான் இங்கு நோய் மறைமுகமாக விதைக்கப்படுகிறது. அந்த நோய்களை இங்கு விதைத்து, மறைமுகமாக இங்குள்ள நிதி ஆதாரங்கள் கொள்ளயடிக்கப்படுகிறது. எனவே நாம் தான் நுகர்ர்வுப் பொருட்களை வாங்கும் பொது மிகக்கவனமாக இருக்க வேண்டும்.
2007 கணக்குப்படி இந்தியாவில் சர்க்கரை வியாதிக்கான வணிக மதிப்பு 700 கோடி. அமெரிக்காவின் எலிலில்லி என்ற நிறுவனம் தயாரிக்கின்ற மருந்துகள் இங்கு மட்டும் 700 கோடி ரூபாய்க்கு விற்பனையாகக் கூடிய வணிகச் சந்தையாக நம் நாடு இருக்கிறது.. இது இன்று கிட்டத்தட்ட 1000 கோடியைத் தாண்டி சென்றிருக்கும். அதனால் நம்முடைய நிதி ஆதாரங்கள் கொள்ளயடிக்கப்படாமல், நம்முடைய நாடு வளமையான நாடாக மாற வேண்டும் என்றால்,நாம் நல்ல உடல் நலத்தோடு, உடல் வளத்தோடு இருக்க வேண்டும்.
அவ்வாறு மாறும் பொழுதுதான் ஒரு முழுமையான, ஒரு ஆரோக்கியமான இந்தியாவை, ஒரு ஆரோக்கியமான தமிழ்ச் சமூகத்தை நாம் படைக்க முடியும். எப்பவுமே நோய்வாய்ப்பட்டவனிடம் படைப்பாற்றல் குறைந்து விடும். ஒரு நல்ல ஆற்றல் உள்ள, படைப்புத்திறன் உள்ள தமிழ் சமூகம் மறுபடியும் வரவேண்டும், வளரவேண்டும் என்றால் சர்க்கரையை கட்டுப்படுத்த வேண்டும். அவ்வாறு கட்டுப்படுத்துவதற்கு உணவே மருந்து மருந்தே உணவு என்ற சித்தர்கள் கோட்பாட்டின் படி அனைவரும் முயற்சி செய்யவேண்டும். நான் கூறிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உணவே அடிப்படையாகக் கொண்ட மருந்துப் பொருட்கள் எல்லாவற்றையுமே தொடர்ந்து சாப்பிடுங்கள்
http://valuable-information.blogspot.in/20…/…/blog-post.html

Thursday, February 26, 2015

notes

தடைகள் விலக தாந்த்ரீக முறை !!!:
இதை வியாழன் காலை 6-7 மதியம் 1-2
அல்லது இரவு 8-9 மட்டுமே செய்ய
வேண்டும்.
ஆகாசதாமரை செடியை வியாழன்
அன்று பறித்தோ (ஏரி மற்றும் நீர் நிலைகளில்
காணப்படும்)அல்லது வாங்கியோ முழுவதுமாக
ஒரு மஞ்சள் நிற துணியில் வெளியில் தெரியாத
படி முடிந்து வீட்டின் வடகிழக்கு மூளையில்
மாட்டி விட வேண்டும். இதை எவரும்
தொடதபடி பார்த்து கொள்ள வேண்டும்.
தொட்டால் பரிகாரம் தடை படும். 45
நாட்களுக்கு ஒரு முறை இதை மாற்றி விடலாம்.
பலன் அளிக்கும் பரிகாரம்
இது என்கிறது தாந்த்ரீகம்.
நம்மை சூழ்ந்துள்ள
எதிர்மறை சக்தியை எதிர்த்து விரட்ட "உப்பு நீர்"
பரிகாரம்
சோம்பேறித்தனம்
என்ன செய்வதென்றே தெரியாத விரக்தி நிலை
நேரம் தவறுதல்- வேகமின்மை
தொடர்ந்து துரத்தும் எதிர்மறை எண்ணங்கள்
கோபம் அல்லது அது போன்ற வேறு உச்சக்கட்ட
உணர்ச்சிகள்
மன அழுத்தம்
திடீர் உடல் நிலை கோளாறுகள்
திருஷ்டியால் ஏற்படும் பல கஷ்டங்கள்
செய்வினை கோளாறுகள்
மல்டி பெர்சனாலிட்டி டிஸார்டர்
பேய் அல்லது ஆவிகள்
அல்லது துர்ஆத்மாவினால் பயம்
மேற்கண்ட துன்பங்கள் நம்மை துரத்தும்
பொழுது கீழ்காணும் சக்தி வாய்ந்த "உப்பு நீர்"
பரிகார முறையை பின்பற்றஅனைத்து
கஷ்டங்களும் விலகி ஓடும். இதை தினமும்
செய்யலாம். மிகுந்த சக்தி வாய்ந்த பரிகாரம்
இது.
தேவையானவை :
1. ஒரு பெரிய அளவு பக்கெட் 2.தண்ணீர் 3.ராக்
சால்ட்
(உண்மையான ஹிமாலயன் ராக் ஸால்ட் 100%
பயனும், இந்துப்பு மற்றும் கல்
உப்பு அல்லது கடல் உப்பு 60% பலனும்
தரும்..ராக் சால்ட் நாட்டு மருந்து கடைகளில்
கிடைக்கும், அவரவர் ஊர்களில் உள்ள
நாட்டு மருந்து கடைகளில்
கேட்டு வாங்கி உபயோகியுங்கள்)
பக்கெட் நிரம்ப தண்ணீர் எடுத்து ஒரு பாக்கெட்
ராக் சால்ட்
போட்டு முட்டிக்கு சற்று கீழே வரை நினையுமாறு கால்களை உள்ளே விட்டு உட்காரவும்.பின்
பு கண்களிரண்டும் மூடி கொண்டு நீரில் உள்ள
இரண்டு கால்களையும்
தேய்து சுத்தப்படுத்துங்கள். இதை செய்யும்
பொழுது மனதிற்குள் 'உங்கள் உடம்பில் மன்தில்
உள்ள அனைத்து எதிர் மறை சக்திகளும்
வெளியேற வேண்டுமென பிரார்த்தித்துக
்கொண்டே செய்யவும். 15 நிமிடங்கள்
வரை செய்து விட்டு பின்பு நீரை பார்த்தால்,
சிலருக்கு நீர் மிகவும் கருத்து போயிருக்கும்,
சிலருக்கு நீரில் நாற்றம் எடுக்கும்,
சிலருக்கு ஏதும் இல்லாமலும் போகலாம். சிலர்
இது முடிந்ததும் மிகவும் களைப்பாகவும்
உணரலாம்..இது உங்களை சுற்றிஇருந்த
எதிர்மறை கரும் சக்திகள்
விரட்டி அடிக்கப்பட்டதை குறிக்கும்.
இதை தினமும் தொடர நல்ல செயல்கள் நடக்க,
நல்ல சிந்தனைகள் வளர ஆரம்பிக்கும்.
வேலை மாற்றத்திற்கு :
அதிகாலை எழுந்து குளித்து புதிய ஆடைகள்
அணிந்து 11
சிவப்பு மிளகாய்களை எடுத்து கொண்டு
வேலை மாற்றத்திற்காண
வேண்டுதலை சூரியனை பார்த்தபடி கூறிக்கொண்டே எறிந்து விடவேண்டும்.
இதை தொடர்ந்து 43 நாட்கள் செய்து வர
வேண்டும். இதற்கிடையில் வேலை மாற்றம்
ஏற்பட்டுவிட்டால் நிறுத்தி விடவும்.
வேலை இல்லாமல் தொடர்ந்து வரும் பண
பிரச்சனைகளுக்கு :
1. சிறிய மூடியுடன் கூடிய செம்பு கிண்ணம்
அல்லது பாத்திரத்தில்
பச்சை பாசிப்பருப்பை நிரப்பி ஓடும்
நீரோடையில் விடவும். சுத்தமான
நீரோடையாக இருக்க வேண்டும்.
2. வலது கையில் வெள்ளி வளையம்
அணியவும். ஆஞ்சநேய வழிபாடு செய்யவும்.
3. உப்பு,சக்கரை,கடலை பருப்பு,சுத்தமான
நெய், கோதுமை மாவு முடிந்த அளவு கோவில்
மடப்பள்ளியில் தானம் செய்யவும்.
4. காய்ச்சாத பசும் பாலை ஆலமரத்திற்கு 7
நாட்கள் ஊற்றி வரவும்-முடிந்த அளவு.
5. குளிக்கும் போது கெட்டி தயிர்
சிறிதளவு நீரில் சேர்த்து பின்பு குளிக்கவும்-7
நாட்கள் மட்டும்.
கடன் தொல்லை :
1. தோலால் ஆன செருப்பு,பெல்ட் மற்றும் பர்ஸ்
உபயோகத்தை நிறுத்தவும்.
2. தொடர்ந்து 16 நாட்கள்
கோவிலுக்கு கொள்ளு தானம் செய்யவும்.
3. முதல் நாள் நீரில் ஊர வைத்த முழு பயத்தம்
பருப்பை மறு நாள்
புறாக்களுக்கு இட்டு வரவும். முடியும்
போதெல்லாம் செய்யலாம்.
4. ஏதேனும் மலரை சுத்தமான நீரோடையில்
தொடர்ந்து 43 நாட்கள் இட்டு வரவும்.
5. தொடர்ந்து 43 நாட்கள்
கோமியத்தை வீட்டினுள் தெளித்து வரவும்.
6. முடியும் போதெல்லாம் 11 பால்
பாக்கெட்டுகள்
கோவிலுக்கு கொடுத்து வரவும்.
இழந்ததை பெற மேலும் இழக்காமல் இருக்க
ஒவ்வொரு திங்களும் அரச மரத்து இலைகள் 11
பறித்து அதில் 4 முறை சிகப்பு சந்தனத்தால்
(நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) "ராம்
ராம்" (இரண்டிரண்டாக 4 முறை) மேலிருந்து கீழ்
எழுதி அந்த 11 இலைகளையும்
ஏதாவது ஒரு அனுமன் கோவிலில்
சென்று வைத்து விட்டு அனுமானை வழிபட்டு வர
ஆஞ்சநேயன் நாம் இழந்த பொருள்,நஷ்டம்
அனைத்தையும் திரும்ப பெற செய்வார்
என்பது உறுதி. நம்பிக்கையுடன்
தொடர்ந்து செய்து வர நலம் பெறலாம்.
சகலமும் வசியமாக பழங்கால முறை
சுத்தமான
கோரோசனையை வெள்ளி,ஞாயிறு அன்று தேனுடன்
கலந்தும், திங்கள் வியாழன் நேய்யுடன்
கலந்தும், செவ்வாய் புதன் பாலுடன் கலந்தும்
மையாக இட்டு செல்ல அனைத்தும்
வசியமாகும்.வேண்டிய காரியம் சித்திக்கும்.
ஜோதிட சூச்சும பரிகாரங்கள்
திருவோணம்
அன்று விஷ்ணுவை துளசி மாலை போட்டு துவரம்
பருப்பு பாயசத்தினால் நிவேதனம்
செய்து அதை தானம் செய்து வர நிலம்
வாங்கும் யோகம் உண்டாகும்.
தீருவீழிமலை சென்று படிக்காசு வைத்து வணங்கி வர
பண வருவாய் அதிகரிக்கும்.
திருவாதிரை அன்று சிவனை வணங்கி விட்டு மருத்துவ
சிகிச்சை மேற்கொண்டால், பல வருடங்களாக
தீராத நோயும் எளிதில் குணமாகும்.
வறுமை நீங்க ரோகிணி நட்சத்திரம் வரும்
நாளில் விரதமிருந்து சிவ பெருமானை வழிபட
சுபிட்சம் பெறலாம்.
பிறரிடம் ஏதேனும் உதவி தேவைப்பட்டால்
மிருகசீஷ நட்சத்திரத்தில்
முருகரை வழிபட்டு பின் சென்று கேட்டால்
கட்டாயம் கிடைக்கும்.
எல்லோர்க்கும் ஏற்ற எளிய பரிகாரங்கள்-
(1) சுவாதி நட்சத்திரம் வரும் நாளில்
கடன்,பொன்,பொருள் எதுவும் கொடுக்க
கூடாது. கொடுத்தால் திரும்பி வராது.
கண்டிப்பாக கடனாளி ஏமாற்றி விடுவார்.
(2) கணவன் அன்பாக நடந்து கொள்ள விசாக
நட்சத்த்திரத்தில் மனைவியானவர்
விரதமிருந்து முருகரையும்,வள்ளி யையும்
வழிபட கணவரின் அனுசரணையும் அன்பும்
பெருகும்.திருமணமாகாத பெண்கள்,நல்ல
கணவன் அமையவும் இப்படி செய்யலாம்.
(3) நீண்ட கால நோய்களுக்கு பரிகாரம், மரண
பயத்திற்கு பரிகாரம், மற்றும் ரகசிய
ஒப்பந்தங்களில் ஈடுபட, மாந்திரீகம் கற்க
கேட்டை நட்சத்திரத்தை தேர்ந்தெடுக்கலாம்.
(4) எதிரிகளை வெற்றி கொள்ள, ஏவல், பேய்,
பில்லி சூனியன்களில் இருந்து விடுபட
பரிகாரங்கள் அவிட்ட நட்சத்திரத்தில் செய்ய
உடனடி பலன் உண்டு. (5) அரசியலில்
வெற்றி அடைய, அரசு வேலைகளில் உயர்
பதவி அடைய திருவண்ணாமலையரை
தொடர்ந்து 3 மாத காலம் அஸ்வினி நட்சத்திரம்
வரும் நாளில் வழிபட்டு வந்தால் கை மேல்
பலன் கிடைக்கும்எல்லோர்க்கும் ஏற்ற எளிய
பரிகாரங்கள்- தொடர்ச்சி 2
(1) கொடுத்த கடன் தொகைகள் திரும்ப
கிடைக்காமல் இருப்பின்-ஆண்கள்
தொடர்ந்து புதன்கிழமைகளில் காலை 6
மணிக்கு முன்னர் சவரம் செய்து வர கடன்
வசூலாகும்.
(2) வியாபாரம் மற்றும் குழந்தைகள் கல்வியில்
தடைகள் ஏற்பட்டால் ஆன்மீக
புத்தகங்களை அச்சிட்டு இலவச விநியோகம்
செய்ய தடைகள் விலகும்.
(3) சிவன் கோவிலுக்கு தொண்டுகள் செய்ய
அரசாங்கத்தால் வியாபாரத்திற்கு ஏற்படும்
தொல்லைகள் நீங்கும்.
(4) நவதானியங்களை மஞ்சள் துணியில்
முடிந்து கடை / ஆபீஸ் வாசலில்
கட்டி,கல்லாவிலும் போட்டு வைக்க வியாபாரம்
நஷ்டம் என்பதே இருக்காது.
(5) பூர்வீக சொத்து கிடைக்க
வீட்டிலேயே திருச்செந்தூர் முருகன் படம்
வாங்கி வைத்து செவ்வாய் தோறும்
செவ்வரளி பூவால் 27 வாரங்கள்
(செவ்வாய்ககிழமைகள் மட்டும்) அர்ச்சித்து வர
கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்கும்.
(6) சித்திரை நட்சத்திரத்தில்
விரதமிருந்து முருக பெருமானையும்
வள்ளியையும் வழிபட காதல் முயற்சிகள்
கை கூடும்.எல்லோர்க்கும் ஏற்ற எளிய
பரிகாரங்கள்- தொடர்ச்சி
(1) முக்கியமான காரியங்களுக்கு வெளியில்
செல்லும் பொழுது சிறிது மஞ்சள் தூள்
அல்லது ஒரு மஞ்சள் கட்டை எடுத்து செல்ல,
போகிற காரியம் தடையில்லாமல்
முடிவடையும்.
(2) புதிய வீடு அல்லது கடைகளுக்கு :
முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7, சிறிய
வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2,
இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய
வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு புறமாக
வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.
(3) வீட்டில் உள்ளவர்க்கு ஏதேனும்
தொற்று நோய் வந்து அவதிப்பட்டால்-சிறிய
மண் சட்டியில் மஞ்சள் லட்டு,ஒரு முட்டை, 2
நாணயங்கள் மற்றும் சிறிது குங்குமம்
வைத்து நோய்வாய்பட்டவரின் தலையை 3
முறை வலமாக மட்டும் சுற்றி 4 ரோடுகள்
சேரும் இடத்தில் மதியம் 12
மணிக்கு எறிந்து விட, நோய் விலகும்.
(4) கடன்களால் வெகு காலம் துன்பப்படும்
நபர்களுக்கு : ஒன்னேகால்
அடி வெள்ளை துணியை எடுத்து அதில்
நான்கு பக்கங்களிலும்
சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி,
பின்பு நடுவிலும்
ஒரு ரோஜாவை வைத்து அதை 3 நதிகள்
சங்கமிக்கும் இடத்தில் விட, கடன்கள்
அடியோடு அழியும்.
(5) வியாபாரம் செழிக்க, வியாபார
போட்டி,வியாபாரத்தில் செய்வினை அகல :
ஒரு ஞாயிறு அன்று ஐந்து எலுமிச்சைகளை பாதியாக
வெட்டி, அத்துடன் சிறுது வெண்கடுகு மற்றும்
மிளகு தூவி பின்பு மூடி விடவும். மறு நாள்
திறந்தவுடன், அனைத்தையும்
கூட்டி இடத்தை விட்டு சிறிது தூரம்
சென்று அனைத்தையும் எரித்து விடவும்.
எரிப்பதற்க்கு மண்எண்னை அல்லது பெட்ரோல்
உபயோகிக்க கூடாது. அனைத்தும் எறிந்ததும்
வியாபார இடத்தில் உள்ள அனைத்து எதிர்
மறை சக்திகளும் அழிந்து போய், வியாபாரம்
செழிக்கும்.
(6) வேலை இண்டெர்வியூ அல்லது ஏதேனும்
புதிய தொழில், முயற்சி தொடங்குமுன்,
சம்பந்தபட்டவரை கிழக்கு முகமாக நிற்க
வைத்து மூன்று முறை தலையை வலது புறமாக
சிறிது பச்சை பயிரை வைத்து சுற்றி பின்பு அவர்
மேல் தூவி விட வேண்டும். அவர் சென்றதும்
அவற்றை கூட்டி வெளியில்
பறவைகளுக்கு கொட்டி விடலாம்.
இது செயலில் வெற்றியை தேடித்தரும். எந்த
கிழமைகளில் தூபம் போடுவதால் என்ன
பலன்கள் ?? ஞாயிறு- ஆத்ம பலம், சகல
செல்வாக்கு,புகழ் உயரும், ஈஸ்வர அருள்
கிட்டும்
திங்கள் - தேக,மன ஆரோக்கியம்,மன அமைதி,
அம்பாள் அருள் கிடைக்கும்
செவ்வாய் - எதிரிகளின்
போட்டி,பொறாமை மற்றும் தீய-எதிர்
மறை எண்ணங்களின் மூலம் உண்டான
திருஷ்டி கழிதல், எதிரிகளின்
தொல்லை நீங்குதல், முருகனின் அருள் , கடன்
நிவர்த்தி.
புதன் - நம்பிக்கை துரோகம், சூழ்ச்சிகளில்
இருந்து தப்புதல், நல்ல சிந்தனை வளர்ச்சி,
வியாபார வெற்றி, சுதர்சனரின் அருள் கிட்டல்.
வியாழன் - சகல சுப பலன்கள், பெரியோர்கள்
குருமார்கள் ஆசி கிட்டுதல், சித்தர்களின் மனம்
குளிரும், முன்னேற்றங்கள் தொடரும்.
வெள்ளி -லட்சுமி கடாட்சம், சகல காரிய சித்தி.
சனி - சோம்பல் நீங்குதல், சகல துன்பங்கள்
நீங்கி சனி பகவான், பைரவர் அருள் கிட்டும்.
ருத்ராக்க்ஷ பரிகாரங்கள்-தொடர்ச்சி
(1) பெரிய அளவில் செய்யப்படும் புதிய
முயற்சிகள், பெரிய தொழிற்சாலை, ப்ராஜெக்ட்
18 முகம்
(2) குழந்தைகளுக்கு தீர்க்க முடியாத
வியாதிகள், உடல் நல கோளாறு
12 முகம்
(3) பொருளாதார வளர்ச்சி,
எதிர்காலத்தை அறியும் தன்மை
15 முகம்
(4) எல்லா வித பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு
ஒன்று முதல் 14 வரையிலான முகங்கள் மற்றும்
கணேசா
ருத்திராக்ஷம், கௌரிஷங்கர் கொண்ட சித்த
மாலை
(5) உச்ச நிலை தியானம்,ஆன்மீகம் கைகூட
ஒன்று,மூன்று,ஐந்து,ஒன்பது,
பதினொன்று,மற்றும் கௌரிஷங்கர்
(6) வெளிநாட்டில் வாழ்ந்து முன்னேற்றம்
இல்லாத நிலை மற்றும் பாதுகாப்பு
சித்த மாலை அல்லது பதினோரு முகம்
(7) எந்த துறையிலும் பிரகாசிக்க
பதினான்கு / பதினேழு / பத்தொன்பது /
இருவது முகம்
(8) ஆன்மீகத்திலும் பொருளாதாரத்திலும்
சிறந்து விளங்கும்.

Wednesday, January 28, 2015

for dialysis patients and kidney failure

சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் - விஞ்ஞானயின் ஆச்சரியமான உண்மை சம்பவம் !
இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர...்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.
கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை.
இங்கு முழுவதுமாய் செயலிழந்த, இன்றைய தொழிற்நுட்ப வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை விடப்பட்ட ஒர் சிறு நீரகத்தின் செயல்பாட்டை 5%திலிருந்து 80%மாய், இரண்டே மாதத்தில் மாற்றிய ஒர் கதையை இங்கு கூறுகிறேன். நான் கதையென்று சொன்னவுடன், ஏதோ கட்டு கதையென்றோ, எங்கெனும் புத்தகத்தில் படித்தது என்றோ நினைக்க வேண்டாம். இது நானே அருகில் அமர்ந்து கண்டு வியந்த உண்மை.
மதுரையில் எனது பேராசிரியர் திரு. சண்முகம் அவர்களுக்கு 2006ல் திடீரென்று சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரக செயல்பாடு 5%க்கும் (ஒரு நாளைக்கு 50 மில்லி லிட்டர் சிறுநீர் வெளியேற்றம்) கீழ் சென்றுவிட்டது. இந்த செயலிழப்புக்கு முக்கிய காரணம் அவர் கொழுப்பை (Cholesterol) கட்டுபடுத்த உட்கொண்ட ஒரு வகை மருந்துகள் (statin drugs) என்பது தனிக்கதை.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியபின் தினமும் மூன்று முறை பெரிடொனியல் டயாலிசிஸ் (Peritoneal dialysis) அவரே செய்து கொண்டார். டயாலிசிஸினால் அனைத்துச் சத்துக்களும் ஊறியப் பெற்று துரும்பாய் இளைத்து, நடக்க கூட சக்தியின்றி சோர்ந்து போனார். அவரது மகன் திரு.பாரி அவர்கள் கணிணி வல்லுநராக இருந்தாலும் ஆன்மீகம், யோகா, இலக்கியம், சுற்றுபுறவியல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உள்ளவர்.
அவர் இயற்கை வழியின் படி, பழங்கால மருத்துவத்தில் கூறியுள்ள இஞ்சி ஒத்தட முறையை தந்தைக்கு கூறினார்.
எனது பேராசிரியர் அடிப்படையில் ஒர் ஆய்வாளர் என்பதால், தன் சிறு நீரகத்தையே ஆய்வு பொருளாய் கொண்டு இந்த இயற்கை வழியை பரிசோதித்தார். ஆம் உண்மையிலேயே அவர் ஆய்வுதான் செய்தார்,
தினமும் எவ்வளவு சிறுநீர் வெளியெறுகிறது என்று அளந்து, குறித்து வைப்பார். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை, சிறுநீரை ஆய்வகத்திற்கு அனுப்பி அதிலுள்ள, அனைத்து சத்து மற்றும் உப்பு பொருட்களின் அளவை அறிந்து அதையும் ஆய்வு செய்வார்.
மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுக் கட்டுப்பாட்டையும் கடுமையாக பின்பற்றினார். இதன்மூலம் இரண்டே மாதத்தில் சிறுநீரக செயல்பாடு தினமும் 50 மில்லிலிட்டர் (5%) சிறுநீரக வெளியேற்றத்திலிருந்து 650-700 மி.லி சிறுநீர் (80%) வெளியேற்றம் என்று தனது செயல்பாட்டை திரும்ப பெற்று, இன்று முழுவதும் குணமடைந்துள்ளார்.
இஞ்சி ஒத்தடம்:
=============
இஞ்சி ஒத்தட முறையை கீழே விரிவாக கூறியுள்ளேன். எனது ஆசிரியருக்கு சில மாதங்கள் நானே, இந்த ஒத்தடம் கொடுத்து உள்ளேன் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
1. ஒரு பானையில் மூன்று லிட்டர் நீரை கொதிக்க வைக்கவும்.
2. 125கி இஞ்சியை துண்டு துண்டாக நறுக்கி, மிக்சி அல்லது அம்மியில் அரைத்து கொள்ளவும்.
3. அரைத்த இஞ்சியை ஒரு துணியில் சிறு மூட்டை போல் கட்டவும்.
4. இப்போழுது கொதிக்கும் நீரில் இஞ்சிச் சாரை நன்கு பிழிந்துவிட்டு,
துணி முடிச்சையும் போட்டு ஒரு தட்டை கொண்டு மூடவும்.
5. அடுப்பை குறைந்த எரி நிலையில் (சிம்) 20 – 25 நிமிடங்கள் வைக்கவும்.
6. பிறகு அடுப்பை அணைத்துவிட்டு மூடிய நிலையிலே 5 நிமிடங்கள் விடவும்.
7. சிகிச்சைக்கான நபரை சட்டையை கழற்றிவிட்டு தலைக்குப்புற படுக்க சொல்லவும்.
8. பிறகு ஒரு சிறு துணியை, கொதிக்கும் இஞ்சி நீரில் நனைத்து புழிந்து, வேறு ஒரு கிண்ணத்தில் புழியவும். அந்த துண்டை சிறுநீரகம் அமைந்துள்ள முதுகின் அடிபகுதியில் விரித்து போடவும்.
9. சூடு தணிந்தவுடன் துணியை மீண்டும் நனைத்து, விரித்து தொடரவும். இவ்வாறாக நீர் ஆ றும் வரை தொடர்ந்து அரை மணி நேரம் செய்யவும்.
பாதத்தின் நான்காம் விரல்:
நம் முன்னோர்கள் அறிவாளிகள். நமது சடங்குகள் அனைத்திற்கும் ஒர் அறிவியல் காரணமுண்டு. உதாரணமாக, பெண்ணின் கால் இரண்டாம் விரலில் அவளின் கர்பப்பையின் நரம்பு முடிவுகள் உள்ளன. அதன் செயல்பாட்டை ஊக்குவிக்கவே திருமணத்தின் அன்று பெண்ணின் இரண்டாம் விரலில் மெட்டி அணிவிக்கப்படுகிறது. அதை போலவே பாதத்தின் நான்காவது விரலில் சிறுநீரக நரம்புத் தொடர்கள் முடிவடைகின்றன. ஆகவே, அமைதியான இடத்தில் அமர்ந்து முழுமனதுடன் நான்காம் விரலை தினமும் சிறிது நேரம் சுற்றி சுற்றி அமுக்கிவிடுவார் (மசாஞ்). இச்செய்கை சிறுநீரகத்தை புத்துணர்வு அடைய செய்யும்.
உணவு முறை
============
சிறுநீரக செயல்பாட்டை சீர் செய்வதற்க்கு, உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.
சோடியம்: உப்பை தவிர்ப்பதன் மூலம் சோடியம் அளவை குறைக்கலாம். எனவே உணவில் அரை உப்பு சேர்த்து கொள்ளவும். உப்புக்கு பதில் எலுமிச்சை சாறு, மிளகு அல்லது குறைந்த அளவு சோடியமுள்ள ஏதெனும் தாவர இலைகளை சேர்த்து கொள்ளவும். நீ ங்கள் பெரிடோனில் டயாலிசிஸ் செய்தால் உப்பை குறைக்க வேண்டாம், ஏனெனில் டயாலிசிஸினால் அதிக அளவில் சோடியம் வெளியெற்றப்படுகிறது.
பொட்டாசியம், பாஸ்பரஸ்:
=======================
உணவில் பொட்டாசியம், பாஸ்பரஸ் அளவையும் குறைத்துக் கொள்ளவும். பயிர் வகைகளை தவிர்க்கவும். காய்கறிகளிலுள்ள பொட்டாசியம் அளவை சமைப்பதன் மூலம் குறைக்களாம். மேலும், காய்களை துண்டுதுண்டாக நறுக்கி ஒர் பானை நீரில் 4 மணி நேரத்திற்கு ஊறவைத்து உண்பதன் மூலமும் பொட்டாசியம் அளவை குறைக்களாம். பாஸ்பரஸ் நிறைந்த பா ல் மற்றும் பால் பொருட்கள் தவிர்க்கவும்.
புரதங்கள் (ப்ரோடீன்):
=================
புரதங்கள் மனித உடலுக்கு இன்றியமையாதது. டயாலிசிஸ் செய்பவர்கள் அதிகம் புரதத்தை இழக்கிறார்கள் எனவே அவர்கள் புரதம் நிறைந்த உணவுகளை சேர்த்துகொள்ள வேண்டும். குறிப்பாக ஊறவைத்த, முளை கட்டிய பயிர்கள் மிகச்சிறந்த புரத பொருளாகும்.
நீர்:
==
நீரின்றி அமையாது இவ்வுலகமென்பது போல், நமது சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமும் 1.4 லிட்டர் நீர் அருந்தவும். அதிக நீர் உயர் இரத்த அழுத்திற்க்கு வித்திடும். நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் பழங்கள், சாம்பார், இரசம் முதலியவையும் நமது நீர் தேவையை பூர்த்தி செய்கிறது என்பதை நினைவில் கொள்க.
சேர்த்து கொள்ள வேண்டியவை
ஒமம்:
=====
ஒம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும்.
புளி:
====
புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால்தான் இந்தோனேசிய மக்களுக்கு அதிகம் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மஞ்சள்:
=======
மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது என்று சித்த மருத்துவத்தின்படியும், இக்கால அறிவியலின்படியும் நிருபிக்கபட்டுள்ளது.
காய்கறிகள்:
==========
பூண்டு, வெங்காயம், காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர்.
பழங்கள்:
=======
ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணிஎண்ணெய்: நல்லெண்ணெய், ஆலிவ்
தவிர்க்க வேண்டியவை
*********************************
காய்கறிகள்: தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரைவள்ளி கிழங்கு
பழங்கள்: வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரன்ஜு, உலர் பழங்கள்
இந்த மருத்துவத்தின் செயல்முறை காணொளியை கீழ்காணும் லிங்கில் காணலாம் ...
அருமை நண்பர்களே !...
இவ்வியாதியால் பலரும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள் , பணம் பிரச்சினையால் சரியாக மருத்துவமும் பார்க்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள் .. எனவே இந்த தகவலை பலருக்கும் தயவு செய்து Share செய்யவோ அல்லது தனி நிலைத் தகவலாகவோ உங்கள் Time Line ல்பதிவு செய்து உதவுமாறு மிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ..